செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் - TNPSC

                           TNPSC ஒருங்கிணைந்த சிவில் சர்வீஸ் தேர்வு-IV                                                                (குரூப்-IV சேவைகள்)




விண்ணப்பப் படிவங்கள் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 28, 2024க்குள் tnpsc.gov.in இல் பதிவு செய்யவும். 

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் குரூப்- 4 அடங்கிய பதவிகளுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் (28.02.2024) இன்றுடன் முடிவடைகிறது.

வயது வரம்பு: கிராம நிர்வாக அலுவலர், வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2024ம் தேதியன்று 21-32 வயதுக்குள் இருக்க வேண்டும். ஏனைய பதவிகளுக்கு விண்ணப்பிக்கு விரும்பும் விண்ணப்பதாரர்கள் 01.07.2024 அன்று 18- 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:  தேர்வர்கள் www.tnpsc.gov.in / www.tnpscexams.in ஆகிய தேர்வாணையத்தின் இணையதளங்கள் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தேர்வர்கள் தேர்வாணைய இணையத் தளத்தில் உள்ள ஒருமுறைப் பதிவு தளத்தில் (One time Registration) பதிவு செய்த பின்பு இத்தேர்விற்கான விண்ணப்பத்தினை நிரப்ப வேண்டும். ஏற்கனவே ஒருமுறைப்பதிவில் பதிவு செய்திருந்தால், தேர்வர்கள் இத்தேர்விற்கான இணையவழி விண்ணப்பத்தை நேரடியாக பூர்த்தி செய்யத் தொடங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தெளிவுரை வேண்டும் விண்ணப்பதாரர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தினை நேரிலோ அல்லது 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணின் மூலமாகவோ, அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம்.

                      இன்று நள்ளிரவு 11.59 மணி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதால், விண்ணப்பத்தாரகள் கடைசி நேரம் காலம் தாழ்த்தாமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...