விஜய் அறிமுகப்படுத்திய செயலி.. முதல் நாளே குவிந்த ரசிகர்கள்.. முடங்கிய ஆப்
2026 எங்கள் இலக்கு என சூளுரைத்துள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்புக்குப் பின்னர் செயலி வடிவில் தற்போது செயலில் இறங்கியுள்ளார். பிப்ரவரி 2-ஆம் தேதி அதிரடியாக கட்சி அறிவிப்பை வெளியிட்ட விஜய், திரைத்துறையில் இருந்து முழுமையாக விலகி, அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்தார்.
அதன் பின்னர், கட்சி அளவில் கூட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், மக்களுடன் கரம் கோர்க்கும் வகையிலான முதல் நிகழ்வை தமிழக வெற்றிக் கழகம் தொடங்கியுள்ளது. உறுப்பினர் சேர்க்கைக்காக பெண்கள் தலைமையில் அணி அமைத்த விஜய், மகளிர் தினத்தில் நடவடிக்கையை தொடங்கியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான பிரத்யேக செயலியை அறிமுகம் செய்த கட்சியின் தலைவர் விஜய், முதல் உறுப்பினராக கட்சியில் இணைந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக