பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ.பி.கள் மட்டும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து அழைக்கப்பட்டு குழந்தை ராமரை தரிசனம் செய்தனர்.
ஸ்ரீ ராம் ஜென்ம பூமி தீர்த்த க்ஷேத்ரா
அறக்கட்டளையின் சார்பில்
ரூ.2000 கோடிக்கும்
அதிகமாக நிதி பெறப்பட்டு அயோத்தியில் ராமர் கோவில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் திறப்பு விழா குறித்த
அறிவிப்பை உத்திர
பிரதேச முதல்வர்
யோகி ஆதித்யநா ஸ்ரீ
த் அறிவித்துள்ளார். இந்த கோவிலை தலைமை கட்டிடக்
கலைஞர் சந்திரகாந்த் பாய் சோம்புரா
வடிவமைத்துள்ளார்.
உத்திர மாநிலம் அயோத்தியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் ஸ்ரீ ராமர் கோவில் 2024 ம் ஆண்டு ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ளதாக உத்திர பிரதோச அரசு அறிவித்துள்ளது. இதனால் கோவிலின் கட்டுமான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளது.
ராமர் பிறந்த இடமான அயோத்தியின் ராம ஜென்ம பூமியில் ஸ்ரீ ராம பிரானுக்கு பிரம்மாண்ட கோவில் கட்டப்பட்டு வருகிறது. இக்கோவிலின் பூமி பூஜை 2020 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5 ம் தேதி நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு, கோவிலின் கட்டுமானப்பணிகளை துவக்கி வைத்தார். இந்த கோவிலில் சூர்யன், விநாயகர், சிவன், துர்க்கை, விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கிட்டதட்ட ரூ.1800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் இந்த பிரம்மாண்ட ராமர் கோவில் மொத்தம் 2.7 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டதாகும். இதில் 57,400 சதுரஅடியில் கோவில் கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. 360 அடி நீளமும், 235 அடி அகலமும், 161 அடி உயரமும் கொண்டதாக இக்கோவில் அமைக்கப்பட்டு வருகிறது. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்த கோவிலில் கீழ் தளத்தில் 160 அறைகளும், முதல் தளத்தில் 132 அறைகளும், 2வது தளத்தில் 74 அறைகளும் உள்ளது. இந்த கோவிலுக்கு மொத்தம் 12 நுழைவு வாயில்கள் உள்ளன.
ஏறக்குறைய 70 சதவீதத்திற்கும் அதிகமான கட்டுமான பணிகள் நிறைவடைந்து விட்டதாகவும் ஜனவரி மூன்றாவது வாரத்தில் கோவில் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ராம ஜானகி பாத், பக்தி பாத், ராம் பாத் ஆகியவற்றின் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் வசதிக்காக புதிதாக அமைய உள்ள விமான நிலையம், ரயில் நிலையம் ஆகியவற்றின் பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த நிலையில், கடந்த ஒரு மாதத்தில் அயோத்தி ராமர் கோயிலுக்கு காணிக்கையாக கிடைத்த வருமான குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்து அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் கூறியதாவது, " கோயில் திறக்கப்பட்ட ஒரு மாதத்தில் ரூ.25 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 10 கிலோ தங்கம், 25 கிலோ வெள்ளி நகைகள், காசோலை, என கோயில் உண்டியலில் கிடைத்த காணிக்கை என மொத்தம் ரூ.25 கோடி கிடைத்துள்ளது” என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக