நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், திமுக, அதன் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டு பணியில் தீவிரம் காட்டி வருகிறது. கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியைுயும் திமுக ஒதுக்கியுள்ளது. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக உடனான இரண்டு கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு தொடர்பாக உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தொகுதி பங்கீட்டை இறுதி செய்வதற்காக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் மதிமுக நிர்வாகிகள் இன்று காலை அறிவாலயம் செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த தேர்தலில் போட்டியிட்ட மதுரை மற்றும் கோவை தொகுதியையே இம்முறையும் ஒதுக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கோரிக்கை விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக