வியாழன், 20 நவம்பர், 2025

ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!

 


ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணைந்து 14, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனையரின் திறமையை கண்டறிந்து, சர்வதேச மற்றும் ஒலிம்பிக் போட்டிக்கு தயார்படுத்தும் வகையில் 'அஸ்மிதா லிக்' எனப்படும் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நாடு முழுதும் நடத்து வருகிறது.


அந்த வகையில் தமிழ்நாடு தடகள சங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட தடகள சங்கம் சார்பில், மாவட்ட தடகள் சாம்பியன்ஷிப் போட்டி, ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சாரதா டெக்னோ பள்ளியின் திடலில் வரும் 21ம் தேதி நடக்க உள்ளது.


இதில் மாவட்டத்தில் உள்ள 14, 16 வயதுக்குட்பட்ட வீராங்கனையர் பங்கேற்கலாம். இதுகுறித்து ஈரோடு தடகள சங்க செயலாளர் கோவிந்தராஜூ கூறியதாவது


தடகள வீரங்கனையரின் திறமையை, 'அஸ்மீதா லீக்' எனப்படும் திட்டத்தின் வாயிலாக கண்டறிந்து அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் இந்திய தடகள சங்கம் வழங்க முன்வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.


ஒவ்வொரு மாவட்டத்திலும் இளம் வீராங்கனையர், ஒலிம்பிக் கனவுகளுடன் செல்ல பாதை தெரியாமல் சிரமப்பட்டு வரும் நிலையில், இத்திட்டம் அவர்களின் கனவுக்கு பாதை அமைத்து கொடுக்கும்.


ஈரோடு மாவட்டத்தில், வரும் 21ம் தேதி இப்போட்டி துவங்கவுள்ளது இதில் 14, 16 வயதுக்கு உட்பட்ட தடகள வீராங்கனையர் பங்கேற்று, தங்கள் திறமையை உலகிற்கு காட்ட வேண்டும்.


அருள்மிகு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேர்த் திருவிழா 2025–2026 – நிகழ்ச்சி விரிவுகள்




அருள்மிகு பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் தேர்த் திருவிழா 2025–2026 – நிகழ்ச்சி விரிவுகள்



📅 25/12/2025 – பூச்சாட்டுதல் (பூச்சாத்துதல்)

  • அம்மனுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்படும் நாள்.
  • புதிய அறுகம்புல், செம்பருத்தி, அரளி உள்ளிட்ட பூக்களால் பேராலங்காரம்.
  • இந்த பூச்சாட்டுதல் மூலம், வரவிருக்கும் திருவிழா நிகழ்வுகளின் ஆரம்பம் குறிக்கப்படுகிறது.
  • கிராம மக்கள், பக்தர்கள் அனைவரும் முதல் வழிபாட்டை செய்து ஆண்டுவிழாவை தொடங்குவர்.

📅 05/01/2026 – சந்தணகாப்பு

  • அம்மனுக்கு சாந்தனம் பூசப்படும் முக்கியமான நிகழ்ச்சி.
  • உடல் சாந்தம், தர்மம் மற்றும் ஆன்ம சுத்தி குறிக்கும் தினம்.
  • சாந்தனம் பூசுதல் தெய்வீக கருணையை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
  • அதிகமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு அம்மனின் அருளைப் பெறுவர்.

📅 07/01/2026 – பச்சைப் பூஜை

  • பச்சைப் பூஜை என்பது இயற்கை வளம், பசுமை, வளமை ஆகியவற்றை குறிக்கும்.
  • நெல், பழமரம், காய்கறி போன்ற இயற்கை வளங்களை முன்வைத்து செய்யப்படும் பூஜை.
  • அக்கிரகாரத்தில் வளம் அதிகரிக்க வேண்டி பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
  • திருவிழாவின் முக்கிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் இதுவும் ஒன்று.

📅 08/01/2026 – திருக்குண்டம்

  • அம்மனுக்கு திருக்குளித்தல் (பவித்ர ஸ்நானம்) நடைபெறும் நாள்.
  • புனித நீரில் தெய்வீக சக்தியை எழுப்பும் சடங்குகள் நடைபெறும்.
  • திருக்குண்டமிடுவது அம்மனின் புனித சக்தி அதிகரிக்கும் நாளாகக் கருதப்படுகிறது.
  • இந்த நாள் பெரும் திரளான பக்தர்கள் கூடும் நாள்.

📅 09/01/2026 – தேர்த் திருவிழா

  • ஆண்டுவிழாவின் மிகப் பெரிய மற்றும் மகத்தான நிகழ்வு.
  • அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் தேரில் எழுந்தருளி ஊரெங்கும் வீதி உலா வருகிறார்.
  • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கயிறு இழுத்து தங்கள் விரதத்தை நிறைவேற்றுகின்றனர்.
  • ஓலைச்செண்டு, தாளம், நாதஸ்வரம், ஊர்வலம் ஆகியவை இடம் பெறும்.
  • இந்த நாள் முழு பாரியூர் மட்டுமின்றி சுற்றுப்பகுதிகளில் இருந்து வரும் பக்தர்களால் நிரம்பி வழியும்.

📅 10/01/2026 – முத்து பல்லாக்கு

  • அம்மன் அழகிய முத்துப்பல்லாக்கில் எழுந்தருளி சிறப்பு வீதி உலா.
  • வெள்ளி கம்பங்கள், முத்து மாலைகள், ஆபரண அலங்காரங்களுடன் அம்மன் பவனி.
  • பெண்கள், ஆண்கள், சிறுவர் என அனைவரும் விளக்கேற்றி, தீப்பந்தம் ஏந்தி பங்கேற்கும் வழக்குண்டு.
  • அம்மனின் ஐசுவர்ய வடிவத்தை வெளிப்படுத்தும் அபரிமிதமான நிகழ்ச்சி.

📅 17/01/2026 – மறுபூஜை

  • திருவிழாவின் நிறைவுப் பூஜை.
  • முழு விழா நாட்களில் நடந்த அனைத்து சடங்குகளுக்கும் இறுதி நன்றி வழிபாடு.
  • அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.
  • பக்தர்கள் நெய்வேதியம் வழங்கி, ஆண்டுவிழாவை நிறைவு செய்கின்றனர்.
  • அடுத்தாண்டு விழாவை எண்ணி பிரார்த்தனை செய்யப்படும் நாள்.


புதன், 19 நவம்பர், 2025

பவானி அருள்மீகு சக்தி விநாயகர் தீர்த்த குடம்

 

பவானி

ஈரோடு மாவட்டம் பவானி காமராஜர் நகரில் அமைந்துள்ள அருள்மீகு சக்தி விநாயகர் ஆலயத்தில் நாளை மறுநாள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதால் இன்று காலை சுமார் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள்  கூடுதுறை சென்று தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர்..

ஜம்பை அருகே வீட்டில் தீ விபத்து...!



பவானி 

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள ஜம்பை நல்லிபாளையத்தை சேர்ந்தவர் மூர்த்தி (45) இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவர் வேலைக்கு சென்று விட் டார். வீட்டில் இருந்த இவருடைய தாயார் சமையல் செய்வ தற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென தீப்பிடித்து குடிசையில் பரவியது. மூர்த்தியின்  தாயார் வெளியே ஓடி வந்தார். இது குறித்து பவானி தீயணைப்பு துறை நிலை அலுவலர் பழனிச்சாமி தலைமையில் சென்றனர். அந்த குடிசைக்கு தண்ணீரை பீச்சடித்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். வீட்டில் இருந்த 2 பவுன் நகை பணம் தீயில் எரிந்து நாசமானது. கியாஸ் கசிவு காரணமாக இந்த விபத்து என்பதை இருக்கலாம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.

செவ்வாய், 12 மார்ச், 2024

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு, எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் அதிக கட்சிகள் கைகோர்த்துள்ளதால், மெகா கூட்டணி உருவாக்கியுள்ளது என்று கூறினார். மக்களவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


இதையடுத்து  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று பாஜக சார்பில் எந்த நிர்பந்தமும் தரவில்லை எனக்கூறினார். மேலும், தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் குக்கர் சின்னத்தை ஒதுக்கும் என்று நம்பிக்கை இருப்பதாக கூறிய அவர், அமமுக வேட்பாளர்கள் குக்கர் சின்னத்தில் போட்டியிடுவார்கள் என்று உறுதிப்படக் கூறினார். மோடி 3 ஆவது முறையாக பிரதமரானால், தமிழ்நாட்டிற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று நம்பிக்கையில் கூட்டணி அமைத்து இருப்பதாக டி.டி.வி. தினகரன் கூறினார்.


மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை, தான் முடிவெடுக்கவில்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
 

திங்கள், 11 மார்ச், 2024

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்..

இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?


ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள் ஒரு மாத காலம் நோன்பு இருப்பது மரபு. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள் சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு பிறகு சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பு இருப்பார்கள். ஒவ்வொரு பகுதியிலும் பிறை தெரிவதற்கு ஏற்ப ரமலான் மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவில் ஞாயிற்றுக்கிழமை ரமலான் பிறை தென்பட்டது. இதனால் நேற்று (திங்கட்கிழமை) முதல் சவுதி உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு தொடங்கியது.

இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாகவும் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள்..

1. புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைத்து வகையான அசுத்தங்கள் மற்றும் இன்பங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் பிரார்த்தனைகள், ஆன்மாவின் தூய்மை, ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவற்றில் தங்கள் மனதை செலுத்த வேண்டும். இதை காலம் காலமாக இஸ்லாமிய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

2. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது இந்த மாதத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, விரத விதிப்படி சூரியன் உதிக்கும் முன்பும், சூரியன் மறைந்த பின்பும் மட்டுமே உணவு உண்ணலாம்.

3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பருவமடையும் குழந்தைகள் நோன்பு வைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே போன்று, மிகவும் வயதான பெரியோர்களும் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.

4. பாரம்பரியமாக, மக்கள் பேரீச்சம்பழத்துடன் நோன்பை முடித்து கொள்வார்கள்.

5. ஒரு மாத நோன்பை முடிக்கும் வகையில் மிகப்பெரிய இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தின் பண்டிகை நாளில், சந்திரனைப் பார்த்த பிறகு நோம்பு முடிவடைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரம்ஜான் கொண்டாட்டத்தில் உணவு தானம் செய்ய வேண்டும். அதாவது சமைத்த உணவை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.

உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?

உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?


சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனை வழங்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாக பறிபோனது.
அத்துடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியது.

இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூமோட்டோ வழக்கில் அதிக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்முடி தரப்பு வாதிட்டது.

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் எம்பி அப்சல் அன்சாரி மீதான வழக்குகளில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதையும் பொன்முடி தரப்பு சுட்டிக்காட்டியது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து,  சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என அறிவித்த உயர்நீதிமன்ற உத்தரவும் நிறுத்திவைக்கப்பட்டது. குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவை செயலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுடன், சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார்.

மேலும், சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு வந்த பொன்முடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

இதே போன்று, பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விசிக எம்பி ரவிக்குமாரும் இதில் பங்கேற்றார்.

இதனிடையே நியூஸ் 18-க்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த திமுக வழக்கறிஞர் வில்சன், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு எந்த தடையும் இல்லை என்றார். மேலும், மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பறிப்பதற்கு முன்னால், மூன்று மாதம் அவகாசம் வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அமைச்சர் செல்லூர் ராஜு, பொன்முடியின் தலைக்கு மேல் இன்னமும் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக கூறினார்.குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்திவைக்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

 

ஈரோடு மாவட்டத்தில் தடகளப் போட்டிகள் - வீரர் வீராங்கனைகளுக்கு அழைப்பு..!

  ஈரோடு மாவட்டத்தில் நடைபெற உள்ள தடகள போட்டியில் பங்கேற்க வீராங்கனையருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தடகள சங்கம், இந்திய விளையாட்ட...