பாஜகவின் 10 தொகுதிகள்.. வேட்பாளர் பட்டியலுடன் டெல்லி செல்லும் அண்ணாமலை
இந்நிலையில், கட்சியின் தேர்தல் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறவுள்ளது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில், மத்திய அமைச்சர் எல்.முருகன், தேசிய மகளிர் அணி வானதி சீனிவாசன் மற்றும் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்டோரும் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் வெற்றி வாய்ப்புள்ள 10 மக்களவைத் தொகுதிகளின் பட்டியலை இறுதி செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
இதனுடன் வேட்பாளர் பட்டியலும் தயார் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பாஜக சார்பில் வெளியாகவுள்ள 2-வது வேட்பாளர் பட்டியலில் இந்த 10 தொகுதிகள் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டம் முடிந்த பின்னர், டெல்லி செல்லவுள்ள அண்ணாமலை, இன்று தேர்வு செய்யும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் பட்டியலை மேலிட தலைவர்களிடம் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக