ஞாயிறு, 10 மார்ச், 2024

டிடிவி தினகரனுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் - ஓபிஎஸ்

 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில், தங்கள் அமைப்பு சார்பில் போட்டியிடுவோம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தங்கள் அமைப்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார்.

இதையடுத்து, அங்கு சென்ற பாஜக குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தரப்பில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்பதை பாஜக குழுவிடம் தெரிவித்ததாக கூறினார்.

மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடனும் பாஜக குழுவினர் பேச்சு நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...