சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில், பாஜக சார்பில் மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நள்ளிரவு 12 மணி வரை நீடித்த இந்த பேச்சுவார்த்தையில், தொகுதி பங்கீடு, எந்த சின்னத்தில் போட்டியிடுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் அதிக கட்சிகள் கைகோர்த்துள்ளதால், மெகா கூட்டணி உருவாக்கியுள்ளது என்று கூறினார். மக்களவை தேர்தலில் எத்தனை தொகுதிகளில் போட்டியிட உள்ளோம் என்பது குறித்து விரைவில் அறிவிப்பதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை, தான் முடிவெடுக்கவில்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக