செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலய பங்குனி உத்திரம்...

                          திருவாரூர் கொடியேற்ற உற்சவம்




திருவாரூர் என்றாலே அனைவரின் ஞாபகத்திற்கு வருவது ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான ஆழித்தேர் தான். திருவாரூரில் மிகப் பிரசித்தி பெற்ற தியாகராஜர் ஆலயம் சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும் சர்வதேச பரிகார நிவர்த்தி ஸ்தலமாகவும் திகழ்கிறது. இந்த ஆலயத்தில் பங்குனி உத்திரதிருவிழா மற்றும் ஆழித்தேரோட்ட விழா தொடக்கமாக பிப்.27 காலை ஆலயத்தின் பிரதான பிரகாரத்தில் உள்ள கொடியேற்ற உற்சவம் விமர்சையாக நடைபெற்றது.

ஸ்ரீவன்மீகநாதர் சன்னதி எதிரே வந்தப்பின் 54 அடி உயரம் கொண்ட கொடிமரத்தின் பீடத்தினை சுற்றியுள்ள ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மஞ்சள், பால், சந்தனம், தேன், தயிர் முதலான பொருட்களைக்கொண்டு அபிஷேகங்கள் நடைப்பெற்றன .  

  இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.


                                                                                       








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...