வெள்ளி, 1 மார்ச், 2024

தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி கடித்த வெறி நாய்

 

                             










                    தெருவில் சென்றவர்களை விரட்டி விரட்டி  கடித்த வெறி நாய்


திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளான சாலரப்பட்டி, நீலம்பூர், போத்தநாயக்கனூர், கழுகரை, ஐஸ்வர்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் நாய் தொல்லை இருந்து வருவதாகவும் அதைப்பிடிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அப்பகுதி மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பே கோரிக்கை வைத்திருந்தனர்.


இந்நிலையில், நேற்றும், அதற்கு முன்தினமும் சாலையில் சுற்றித் திரிந்த வெறிநாய் ஒன்று, அப்பகுதி மக்களை மோசமாக கடித்துள்ளது. இதில் பலத்த காயமடைந்த பெண்கள் குழந்தைகள் என 20 பேர் மடத்துக்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


இது தொடர்பாக மருத்துவர் கூறுகையில், “வெறிநாய்க்கடிக்கு தேவையான மருந்து வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. எட்டு பேர் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளனர்” என தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மடத்துக்குளம் பேரூராட்சி நிர்வாகம், பொது மக்களை கடித்த வெறிநாயை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...