மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து தற்போது வரை, தான் முடிவெடுக்கவில்லை என்றும் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
BHAVANI KOODAL TV
நமது பவானி கூடல் டிவி - ஆன்மீக நிகழ்வுகள் , செய்திகள், விளம்பரங்கள் பதிவிடப்படும் Bhavani Koodal Tv YouTube Channel-க்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்... Subscribe To Our YouTube Channel For Updates On Useful Videos What's app Number : 9942919245 Email : koodaltvbhavani@gmail.com
செவ்வாய், 12 மார்ச், 2024
இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி
திங்கள், 11 மார்ச், 2024
இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்..
இன்று முதல் ரமலான் நோன்பு தொடக்கம்.. கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்னென்ன?
இந்நிலையில் தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாகவும் ஏப்ரல் 11ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாடு அரசு தலைமை ஹாஜி அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவர்களை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டியவைகள்..
1. புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் அனைத்து வகையான அசுத்தங்கள் மற்றும் இன்பங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். மாறாக, அவர்கள் பிரார்த்தனைகள், ஆன்மாவின் தூய்மை, ஆன்மீகம் மற்றும் தொண்டு ஆகியவற்றில் தங்கள் மனதை செலுத்த வேண்டும். இதை காலம் காலமாக இஸ்லாமிய மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
2. புனித ரமலான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பது இந்த மாதத்தின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே, விரத விதிப்படி சூரியன் உதிக்கும் முன்பும், சூரியன் மறைந்த பின்பும் மட்டுமே உணவு உண்ணலாம்.
3. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அல்லது தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் மற்றும் உடல் ரீதியாகவோ அல்லது மனரீதியாகவோ பாதிக்கப்பட்டவர்கள் இந்த நேரத்தில் நோன்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறார்கள். பருவமடையும் குழந்தைகள் நோன்பு வைக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அதே போன்று, மிகவும் வயதான பெரியோர்களும் நோன்பு வைக்க வேண்டும் என்கிற அவசியமும் இல்லை.
4. பாரம்பரியமாக, மக்கள் பேரீச்சம்பழத்துடன் நோன்பை முடித்து கொள்வார்கள்.
5. ஒரு மாத நோன்பை முடிக்கும் வகையில் மிகப்பெரிய இஸ்லாமிய பண்டிகையான ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தின் பண்டிகை நாளில், சந்திரனைப் பார்த்த பிறகு நோம்பு முடிவடைகிறது. அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ரம்ஜான் கொண்டாட்டத்தில் உணவு தானம் செய்ய வேண்டும். அதாவது சமைத்த உணவை சுற்றியுள்ள உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிர்ந்து உண்ண வேண்டும்.
உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?
உச்ச நீதிமன்ற உத்தரவால் பொன்முடிக்கு மீண்டும் எம்எல்ஏ பதவி?
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ், தண்டனை வழங்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாக பறிபோனது.
அத்துடன், திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலகம் கடிதம் எழுதியது.
இதனிடையே, உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூமோட்டோ வழக்கில் அதிக தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக பொன்முடி தரப்பு வாதிட்டது.
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பகுஜன் சமாஜ் எம்பி அப்சல் அன்சாரி மீதான வழக்குகளில் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதையும் பொன்முடி தரப்பு சுட்டிக்காட்டியது.
திருக்கோவிலூர் தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதால், அதற்கு முன்னதாக உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இவ்வழக்கில் பொன்முடி மற்றும் அவரது மனைவியை குற்றவாளி என அறிவித்த உயர்நீதிமன்ற உத்தரவும் நிறுத்திவைக்கப்பட்டது. குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால், பொன்முடி திருக்கோவிலூர் எம்எல்ஏ-வாக தொடரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, பொன்முடி தனது எம்எல்ஏ பதவியை திரும்ப பெறக்கோரி சட்டப்பேரவை செயலகத்தை அணுகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனுடன், சபாநாயகர் அப்பாவு ஆலோசனை நடத்தினார்.
மேலும், சென்னை செனடாப் சாலையில் உள்ள முதலமைச்சரின் முகாம் அலுவலகத்திற்கு வந்த பொன்முடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது திமுக மூத்த நிர்வாகிகள் துரைமுருகன், டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.
இதே போன்று, பொன்முடியின் சொந்த மாவட்டமான விழுப்புரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்று திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விசிக எம்பி ரவிக்குமாரும் இதில் பங்கேற்றார்.
இதனிடையே நியூஸ் 18-க்கு தொலைபேசி வாயிலாக பேட்டியளித்த திமுக வழக்கறிஞர் வில்சன், மீண்டும் அமைச்சராக பொன்முடிக்கு எந்த தடையும் இல்லை என்றார். மேலும், மக்கள் பிரதிநிதிகளின் பதவிகளை பறிப்பதற்கு முன்னால், மூன்று மாதம் அவகாசம் வழங்கும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமைச்சர் செல்லூர் ராஜு, பொன்முடியின் தலைக்கு மேல் இன்னமும் கத்தி தொங்கி கொண்டிருப்பதாக கூறினார்.குற்றவாளி என்ற தீர்ப்பும் நிறுத்திவைக்கப்பட்டதால், பொன்முடியின் எம்எல்ஏ பதவி தானாகவே அவருக்கு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஞாயிறு, 10 மார்ச், 2024
இஸ்லாம் மதத்திற்கு மாறியவர்களுக்கு 3.5% இடஒதுக்கீடு
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5% இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது.
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் எஸ்சி பிரிவினர் 3.5% இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த முஸ்லிம் என சாதி சான்றிதழ் வழங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இஸ்லாமியர்களாக மதம் மாறிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அறிவிக்கப்படாத சமூகங்கள் மற்றும் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்களின் கோரிக்கை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த முஸ்லிம்களாக கருத உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிற பிரிவை சேர்ந்தவர்கள் 3.5 % இடஒதுக்கீடு பெறும் வகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற சாதி சான்றிதழ் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோல் பிசிஎம் என சாதி சான்றிதழ் வழங்கும் போது உரிய வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என வருவாய் நிர்வாக ஆணையருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போலீசாரால் சுட்டுப்பிடிக்கப்பட்ட ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் கடந்த 7 ஆம் தேதி கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையால் சுட்டு பிடிக்கப்பட்ட பேச்சிதுரை என்ற ரவுடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தென்திருபுவனத்தை சேர்ந்த ரவுடிகள் பேச்சித்துரை (23), சந்துரு (23) கடந்த 7 ஆம் தேதி அன்று மாலையில் விளாங்குடி பகுதியில் ஒருவரை கொலை செய்து விட்டு அங்கிருந்து திருவிடைமருதூர் செல்லும் வழியில் அரசு பேருந்தை வழிமறித்து அரிவாளால் கண்ணாடிகளை உடைத்துள்ளனர். இதனைக் எதிர்த்து கேட்ட ஓட்டுநர், நடத்துநரை அரிவாளால் வெட்ட விரட்டியுள்ளனர். இந்த தகவலறிந்து வீரநல்லூர் போலீசார் அங்கு விரைந்துள்ளனர்.
போலீஸாரை பார்த்ததும் ரவுடிகள் தப்பியோடியுள்ளனர். அவர்களை விரட்டி சென்றபோது வீரநல்லூர் போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீஸ்காரர் செந்தில்குமார் (35) என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடியுள்ளனர். பின்னர் அருகில் உள்ள வயல்வெளிகளில் புகுந்த ரவுடிகளுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது துப்பாக்கிச்சூடு நடத்தி போலீசார் பேச்சுத்துரையை பிடித்தனர். சந்துரு அங்கிருந்து தப்பியோடினார்.
இதனையடுத்து சுட்டுப் பிடிக்கப்பட்ட பேச்சித்துரை சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பேச்சித்துரை இன்று உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வீரவநல்லூர் மற்றும் பேச்சித்துரை சொந்த ஊர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள்
அமெரிக்காவின் Adult திரைப்படத்துறையில் அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் – 3மாதத்தில் 4பேர் உயிரிழப்பு!
அமெரிக்க Adult திரைப்படத் துறையில் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் Adult படங்களில் நடித்து வந்த நடிகர்கள் சமீபகாலமாக அடுத்தடுத்து உயிரிழந்து வருவது தொடர் கதையாகியுள்ளது. கடந்த 3 மாதங்களில் 4வது நபராக நடிகை சோபியா லியோ மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.
அமெரிக்காவின் மியாமி நகரைச் சேர்ந்தவர் நடிகை சோபியா லியோன். 26 வயதான இவர், தனது 18வது வயதில் Adult படங்களில் நடிக்கத் தொடங்கினார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இவருக்கு அமெரிக்க மாடலிங் ஏஜென்ஸியான 101 மாடலிங் இங்க் நிறுவனத்தின் மூலம் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நட்சத்திரமாக மாறினார். கடந்த 9 ஆண்டுகளில் ஒரு பில்லியன் டாலர் சொத்து மதிப்பு கொண்டவராக சோபியா லியோன் மாறினார்.
இந்த நிலையில் மெக்ஸிகோ நகரிலுள்ள தனது அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த மார்ச் 1ஆம் தேதி சுயநினைவின்றி நடிகை சோபியா கிடந்துள்ளார். இதனையடுத்து அவரின் குடும்பத்தினர் சோபியாவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்திருந்தனர்.
எனினும், சோபியா சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை உயிரிழந்துவிட்டதாக அவரின் வளர்ப்பு தந்தை மைக் ரொமேரோ குறிப்பிட்டுள்ளார்.
அவரில் உயிரிழப்பை பலர் உறுதி செய்துள்ளனர். கோ ஃபன்ட் மீ என்ற நிதி திரட்டும் சமூக வலைதளத்தில் இந்த செய்தியை குறிப்பிட்டுள்ளது. அதேபோல சோபியாவுக்கு நெருக்கமான ஃபுளோரிடாவைச் சேர்ந்த ஏஎம்ஏ ஏஜென்ஸியின் உரிமையாளர் பிரையன் பெர்க்கும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
டிடிவி தினகரனுடன் பாஜக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் - ஓபிஎஸ்
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தனது ஆதரவாளர்களுடன் இணைந்து, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற அமைப்பை நடத்தி வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில், தங்கள் அமைப்பு சார்பில் போட்டியிடுவோம் என ஏற்கனவே அறிவித்திருந்தார். தங்கள் அமைப்பில் விருப்ப மனு அளித்தவர்களிடம், சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று ஓ.பன்னீர்செல்வம் நேர்காணல் நடத்தினார்.
இதையடுத்து, அங்கு சென்ற பாஜக குழுவினர் ஓ.பன்னீர்செல்வத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், ஓ.பன்னீர்செல்வம், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், கு.ப.கிருஷ்ணன் மற்றும் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். பாஜக தரப்பில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, வி.கே.சிங், எல்.முருகன், மேலிட பொறுப்பாளர் அரவிந்த் மேனன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒரு மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தங்கள் தரப்பில் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம் என்பதை பாஜக குழுவிடம் தெரிவித்ததாக கூறினார்.
மேலும், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உடனும் பாஜக குழுவினர் பேச்சு நடத்த இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி
சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...

-
அயோத்தி ராமருக்கு ஒரு மாதத்தில் கிடைத்த உண்டியல் காணிக்கை : பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ...
-
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5% இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இஸ்லாம் மதத்திற...
-
விஜய் அறிமுகப்படுத்திய செயலி.. முதல் நாளே குவிந்த ரசிகர்கள்.. முடங்கிய ஆப் 2026 எங்கள் இலக்கு என சூளுரைத்துள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்...