Shivaratri 2024
மகா சிவராத்திரி நாளில் சிவனை வழிபட்டு பார்வதி தேவியும், தேவர்களும் வேண்டிய வரங்களை பெற்றதாக புராணங்கள் சொல்கின்றன. அது போல் நாமும் சிவ பெருமானை முழு சரணாகதியுடன், உண்மையான பக்தியுடன் வழிபட்டால் நம்முடைய வேண்டுதல்கள் அனைத்தையும் சிவ பெருமான் நிறைவேற்றி வைப்பார் என்பது ஐதீகம். கவலைகள் நீங்கி, காரிய வெற்றியை தரக் கூடிய நாள் மகா சிவராத்திரி விரத நாளாகும்.
இந்த ஆண்டு மகா சிவராத்திரி விழா மார்ச் 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் சிவராத்திரி விரத முறைகள் மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சிவராத்திரி விரதத்தின் மூலம் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றியம் விளக்கம் அளிக்கிறார் புதுக்கோட்டை மாவட்ட அர்ச்சகர் பாலாஜி..
பொதுவாக சிவாலயங்களில் நான்கு , ஐந்து, ஆறு கால பூஜைகள் சிவராத்திரி அன்று நடைபெறும். அதனை தொடர்ந்து வீடுகளிலும் விரதம் இருந்து சிவராத்திரி அன்று சிவபெருமானை வழிபாடு வேண்டும். காலை முதல் விரதம் இருந்து சிவபுராணம், தேவாரம் ,திருவாசகம் ஆகியவற்றை மனதார பாடி சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும் .
அவ்வாறு செய்வதனால் பாற்கடலில் இருந்து விஷத்தை எடுத்து தானுண்டு தேவர்களை காத்தது போல ,சிவபெருமான் நம்முடைய பித்ரு தோஷம் ,சாபங்கள், பாவங்கள் ஆகியவற்றை நிவர்த்தி செய்து துன்பங்களை விலக்கி இன்பங்களை தருவார் என்பது ஐதீகம் .முதலில் சிவபெருமானை வழிபடுவதற்கு முன் அவரது வாகனமான நந்தியை வழிபட வேண்டும்.
குறிப்பாக இந்த மகா சிவராத்திரி அன்று விரதம் இருக்கும் பெண்களுக்கு பல்வேறு நன்மைகள் நடக்கும். இந்த வெள்ளிக்கிழமை வருகின்ற சிவராத்திரிக்கு மிகுந்த சிறப்பு உண்டு .அதாவது பெண்கள் வீடுகளையெல்லாம் தூய்மைப்படுத்தி இந்த மகா சிவராத்திரியில் காலை முதல் விரதம் இருந்து மாலை வேளையில் சிவாலயம் சென்று வழிபாடு நடத்துவதன் மூலம் தங்கள் குடும்பத்தில் நன்மை பெருகி , குழந்தைப்பேறு இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் அர்ச்சகர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக