ஞாயிறு, 3 மார்ச், 2024

இந்த வாரம் சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்...

 

இந்த வாரம் சுட்டெரிக்க காத்திருக்கும் வெயில்... வானிலை ஆய்வு மையம் முக்கிய அறிவிப்பு...




எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு தமிழகத்தில் பல பகுதிகளில் மிக அதிக கன மழை பெய்தது. அதேபோல் கடந்த ஆண்டு கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டநிலையில் இந்த ஆண்டுக்கான கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்க கூடிய நிலையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

அதாவது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருவதினால் மதுரையில் உள்ள பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் சதம் அடித்து வருகின்றது.

இந்த நிலையில் கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இந்த வாரம் வெயிலின் தாக்கம் 40 டிகிரி செல்சியஸ் அளவு வரை வெயிலின் தாக்கம் அதிகமாகவே காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் வரைக்கும் 38 டிகிரி செல்சியஸ் அளவு வரை வெயிலின் தாக்கம் இருந்த நிலையில் இந்த வாரம் முழுவதும் 40 டிகிரி செல்சியஸ் அளவு வெயிலின் தாக்கம் இருப்பதினால் பொதுமக்கள் காலை 11 மணி அளவில் இருந்து மாலை 4 மணி அளவு வரை தேவையில்லாமல் வெளியே செல்வதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி

சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...