விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ளத தொன்மை வாய்ந்த திருநின்ற நாராயண பெருமாள் கோவில் உள்ளது.விரும்பும் வாழ்க்கைத் துணையை அடைய விரும்புபவர்கள் திருநின்ற நாராயண பெருமாளை வேண்டி வணங்கினால் பிரார்த்தனை நிறைவேறும்.
திருமணத் தடை உள்ளவர்கள் பெருமாளையும், தாயாரையும் தொடர்ந்து வணங்கினால் திருமணம் நடைபெறும்என்பது நம்பிக்கை. வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கு பரிவட்டம் சாற்றி வழிபடுகின்றனர். சிலர் பெருமாளுக்கும், தாயாருக்கும் திருமஞ்சனம் செய்தும், புளியோதரை படைத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
சித்ரா பவுர்ணமி, வைகாசி வசந்தோற்சவம், ஆனி பிரமோற்சவம், ஆவணி பவித்ரோற்சவம், புரட்டாசி கருட சேவை, பங்குனி திருக்கல்யாண உற்சவம் ஆகிய விழாக்கள் இக்கோயிலில் விமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
நமது பவானி கூடல் டிவி - ஆன்மீக நிகழ்வுகள் , செய்திகள், விளம்பரங்கள் பதிவிடப்படும் Bhavani Koodal Tv YouTube Channel-க்கு Subscribe செய்ய மறக்காதீர்கள்... Subscribe To Our YouTube Channel For Updates On Useful Videos What's app Number : 9942919245 Email : koodaltvbhavani@gmail.com
வியாழன், 29 பிப்ரவரி, 2024
விரும்பும் வாழ்க்கைத் துணையை அளிக்கும் திருநின்ற நாராயண பெருமாள்
தேர்வு கால அறிவுரைகள்
தேர்வு கால அறிவுரைகள்
அன்புள்ள பெற்றோர்களே
!!
நம் அன்பு மகள்கள் / மகன்கள்
10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் தருணம் இது . என் அன்பான வேண்டுகோள்கள்
முதலில் பெற்றோர்களுக்கு ….
1. தேர்வுகள் முடியும் வரை குழந்தைகளை எந்த கடுமையான சொற்களையும் கூறி திட்டாதீர்கள் .
2. ஏற்கனவே ஏதாவது பாடத்தில் குறைவான மதிப்பென் வாங்கியிருந்தால் அதனை ஞாபகப்படுத்தி அவர்களை குறை கூறாதீர்கள்
.
3. குறிப்பாக தேர்வுகள் முடியும்வரை தொலைக்காட்சி சீரியல்களை கண்டிப்பாக தவிருங்கள் . முடிந்தால் தொலைக்காட்சி கேபிள் ./ டி.டி.ஹெச் தொடர்பையே துண்டித்து வையுங்களேன் .
4. மசாலா உணவுகள் , ஐஸ்க்ரீம் , ஐஸ் போட்ட பழரச பானங்கள் இவற்றையெல்லாம் தேர்வுகள் முடியும் வரை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம் , ஏன் பெற்றோர்களும் தவிர்க்கலாமே
.
5. குழந்தைகள் விடிகாலையில் எழுந்து படிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தாலும் , இரவு நெடுநேரம் முழித்து படிப்பவராக இருந்தாலும் பெற்றோர்களில் அம்மா அல்லது அப்பா ஒருவராவது அவருடன் முழித்திருக்கவும்.
6. தேர்வுகள் முடியும் வரை உங்களிருவரின் சொந்தங்கள் தெரிந்தவர்கள் என யாரும் வீட்டுக்கு வந்தால் சிறிது நேரம் பேசிவிட்டு குழந்தைகளின் தேர்வின் முக்கியத்துவத்தை தன்மையாக சொல்லி அனுப்பிவிடுங்கள்
7. பெற்றோர்கள் இருவருமே தங்களின் ஈகோவை ஒழித்து , நீயா நானா என சண்டை எதுவும் போடுவதை தேர்வுகள் முடியும் வரை ஒத்தி வையுங்கள் . சண்டைகளை ஆற அமர பிறகு போட்டுக்கொள்ளலாம் தேர்வுக்குப்பிறகு .
இனி மாணவர் களுக்கு
……
1. உங்கள் கவனம் முழுதும் உங்களின் வரவிருக்கும் தேர்வுகளின் மீதே இருக்கட்டும்
.
2. விளையாட்டு , வேடிக்கை , முக்கியமாக செல்போன் , கம்ப்யூட்டரில் சாட்டிங் , காதல் இது போன்ற எல்லோவற்றுக்கும் தேர்வு முடியும் வரை தடை போடுங்கள் .
3. சொந்தக்காரர்கள் தெரிந்தவர்கள் இப்படி யாராவது ஏதும் தேர்வு பற்றி அட்வைஸ் சொன்னால் கேட்டுக்கொண்டு அதில் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
4. படிப்பதற்க்கென்று தினமும் குறைந்தது 8 மணி நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் . இப்போது ஸ்டடி லீவு விட்டிருப்பார்களென நினைக்கிறேன் .
5. கடினமான கேள்வி பதில்களை பலமுறை எழுதிப்பார்த்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள் .
6. மறுநாள் தேர்வுக்கு தேவையானவற்றை முதல் நாளே தயாராக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் .
7. ஹால் டிக்கட் , பேனாக்கள் பென்சில் மற்றும் உபகரணங்கள் போன்றவற்றை தேர்வுக்கு போய் வந்தவுடன் தேர்வுகள் முடியும் வரை ஒரே இடத்தில் வைத்து எடுங்கள் .
8. ஒவ்வொரு தேர்வு முடிந்தவுடன் எப்படி எழுதினோம் எவ்வளவு மார்க் வரும் என கணிப்பதில் தவறு இல்லை . ஆனால் ஒரு கேள்விக்கு இப்படி தப்பாக பதில் எழுதி விட்டோமே , ஒரு 5 மார்க் குறைந்து விடுமே , செண்டம் வராதே என நினைத்து வருந்தி வருந்தி கவனத்தை சிதற விட்டு மறுநாள் தேர்வுக்கானதை படிப்பதில் அக்கறை குறைந்து விடவேண்டாமே .
பதில் தப்பாக எழுதியாயிற்று என்பது முடிந்தது. அதற்கான விளைவு வந்து விட்டு போகட்டுமே . ஒவர்சைட்டில் மற்ற பதில்களெல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் , கையெழுத்து அழகாக அல்லது புரியாமல் இருக்கும் பட்சத்தில் அந்த தவறான பதிலுக்கு முழு மார்க்கே கிடைக்கட்டுமே .
9. படிக்கும் நேரத்தில் ஏதாவது டவுட் கேட்கிறேன் என நண்பர்கள்யாருக்காவது போன் செய்தால் அல்லது சந்தேகம் கேட்டு உங்களுக்கு போன் வந்தால் அதற்குண்டான பதிலை மட்டும் சொல்லி விட்டு தொடர்பை துண்டித்து விடவும் . மேலும் க்ரூப் ஸ்டடி என திட்டமிட்டால் படிப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி தேவையற்ற அரட்டைகளை அறவே தவிர்க்கவும் .
மாணவர்களே 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் நீங்கள் அனேகமாக மனதளவில் பொறுப்புள்ளவர்களாகத்தான் இருப்பீர்கள்
. ஆனாலும் பெரியவர்கள் சொல்வதை சொல்லத்தானே வேண்டும். நீங்கள் அனைவரும் உங்கள் வாழ்வினை மாற்றப்போகும் இந்த தேர்வுகளை நன்றாக எழுதி உங்கள் பெற்றோர்களுக்கு மட்டுமல்லாமல் உங்களுக்கே நீங்கள் பெருமை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இரட்டை இலை சின்னத்தில் தான் தேர்தலை சந்திப்போம் - ஓபிஎஸ் உறுதி
சென்னை கிண்டியில் உள்ள தனியார் சொகுசு விடுதியில், டி.டி.வி. தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம், பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர...

-
அயோத்தி ராமருக்கு ஒரு மாதத்தில் கிடைத்த உண்டியல் காணிக்கை : பிரதமர் மோடி கோவிலைத் திறந்து வைத்த கடந்த 22-ம் தேதியன்று, ஆயிரக்கணக்கான வி.வி.ஐ...
-
இஸ்லாம் மதத்திற்கு மாறிய பல்வேறு பிரிவினருக்கு 3.5% இடஒதுக்கீடு அளிக்கும் வகையிலான உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ளது. இஸ்லாம் மதத்திற...
-
விஜய் அறிமுகப்படுத்திய செயலி.. முதல் நாளே குவிந்த ரசிகர்கள்.. முடங்கிய ஆப் 2026 எங்கள் இலக்கு என சூளுரைத்துள்ள நடிகர் விஜய், கட்சி அறிவிப்...